சுற்றுலா அமைச்சகம்
‘‘உள்ளூர் தயாரிப்புக்கு குரல் கொடுப்போம், உள்ளூர் மக்களுக்கு அதிகாரம் அளிப்போம்: குஜராத் அனுபவம்’’ பற்றி மத்திய சுற்றுலாத்துறை இணைய கருத்தரங்கு
Posted On:
14 FEB 2021 11:21AM by PIB Chennai
‘நமது தேசத்தைப் பார்ப்போம்’ என்ற பெயரில் இணைய கருத்தரங்கு தொடரை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் நடத்தி வருகிறது. இதன் 76-வது இணைய கருத்தரங்கு ‘‘உள்ளூர் தயாரிப்புக்கு குரல் கொடுப்போம், உள்ளூர் மக்களுக்கு அதிகாரம் அளிப்போம்: குஜராத் அனுபவம்’’ என்ற தலைப்பில் கடந்த 13-ம் தேதி நடத்தப்பட்டது.
இந்தியாவில் உள்ளூர் மக்களுக்கு அதிகளவிலான வேலைவாய்ப்பு வழங்குவதில், சுற்றுலாத்துறை முக்கிய பங்காற்றுகிறது. வேலை வாய்ப்பு, வருவாய் ஆகியவற்றை உருவாக்குவதிலும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் தொழில் முனைவு முக்கிய காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. சுற்றுலா மூலம் உள்ளூர் மக்களின் வருவாய் பொதுவாக அதிகரிக்கிறது.
ஒற்றுமைச் சிலை அமைந்துள்ள கெவாடியா நகரை சுற்றியுள்ள உள்ளூர் மக்கள், குஜராத்தின் நெசவு தொழிலை மேம்படுத்துவது குறித்து இந்த இணைய கருத்தரங்கில் ஆலோசிக்கப்பட்டது. குஜராத்தின் கைவினை தொழில் பாரம்பரியம், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. குஜராத்தின் கைவினை தொழில் பாரம்பரியம், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பை மட்டும் உருவாக்கவில்லை. நூற்றாண்டுப் பழமை வாய்ந்த கலைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த இணைய கருத்தரங்கை குஜராத்தை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி திரு கவுதம் பி. போபட் வழங்கினார். குஜராத் நெசவுத் தொழிலின் வரலாறு, நெசவாளர்கள் தொடர்பான விஷயங்கள் குறித்து அவர் பேசினார்.
நமது தேசத்தைப் பார்ப்போம் இணைய கருத்தரங்கு, மத்திய மின்னனுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்,
இ-நிர்வாகத் துறையின் தொழில்நுட்ப உதவியுடன் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த இணைய கருத்தரங்கு தொடர்கள்
https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured என்ற இணைப்பிலும், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் சமூக இணையதள கணக்குகளிலும் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1697880
*******
(Release ID: 1697922)
Visitor Counter : 177