விவசாயத்துறை அமைச்சகம்

உலக தானியங்கள் தினத்தை கொண்டாடுவதற்காக ரோமில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச நிகழ்ச்சியில் மத்திய வேளாண் அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் காணொலி மூலம் உரையாற்றினார்

Posted On: 13 FEB 2021 5:05PM by PIB Chennai

உலகிலேயே அதிகளவில் தானியங்களை விளைவித்து உட்கொள்ளும் நாடு இந்தியா என்றும், தானிய உற்பத்தியில் நாடு கிட்டத்தட்ட தன்னிறைவை அடைந்துள்ளதாகவும் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் கூறினார்.

உணவு தானிய உற்பத்தி கடந்த ஐந்தாறு வருடங்களில் 140 டன்களில் இருந்து 240 டன்களுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 23.15 மில்லியன் டன்கள் உணவு தானியங்களை 2019-20-ஆம் ஆண்டு இந்தியா உற்பத்தி செய்துள்ளது. ஒட்டுமொத்த உலக உற்பத்தியில் இது 23.62% ஆகும் என்று உலக தானியங்கள் தினத்தை கொண்டாடுவதற்காக ரோமில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச நிகழ்ச்சியில் காணொலி மூலம் உரையாற்றிய அமைச்சர் கூறினார்.

இஞ்சி, கருமிளகு, ஏலக்காய், மஞ்சள் உள்ளிட்ட மருத்துவ குணம் நிறைந்த தாவரங்களின் உற்பத்தி குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரித்துள்ளதாகவும், ஆயுர்வேதத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அளிக்க வல்லவையாக இவை கருதப்படுவதாகவும் அவர் கூறினார்.

விவசாயத்திற்கு உயரிய முக்கியத்துவம் அளித்து அரசு ஊக்குவித்து வரும் காரணத்தால், அதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 5 மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்து, ரூ. 1.25 லட்சம் கோடியை தற்போது தொட்டுள்ளது.

ஐக்கிய நடுகள் சபையின் 2016-ஆம் ஆண்டு சாசனத்தின் படி உலக தானியங்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை, அதன் துணை அமைப்புகள் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1697748

-----(Release ID: 1697790) Visitor Counter : 11