பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

இந்திய கணினி சங்கத்தின் மின்னணு-ஆளுகை விருதை பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் வென்றது

Posted On: 13 FEB 2021 10:37AM by PIB Chennai

பல்வேறு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப முன்னெடுப்புகளின் மூலம் பழங்குடியினருக்கு அதிகாரமளித்து இந்தியாவை முன்னேற்றும் செயல்பாட்டுக்காக சிறந்த திட்டப் பிரிவு-மத்திய அரசு முகமைக்கான இந்திய கணினி சங்கத்தின் மின்னணு-ஆளுகை விருதை பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் வென்றுள்ளது.

லக்னோவில் நேற்று நடைபெற்ற 18-வது இந்திய கணினி சங்க சிறப்பு ஆர்வக் குழு மின்னணு-ஆளுகை விருதுகள் நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட இந்த விருதை, உத்தரப் பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத்திடம் இருந்து பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சக இணை செயலாளர் டாக்டர் நவல்ஜித் கபூர் பெற்றுக்கொண்டார்.

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சர் திரு. அர்ஜுன் முண்டா, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பயன்கள் நாட்டின் தொலைதூர பகுதிகளையும் சென்றடைய அமைச்சகம் நடவடிக்கைகள் எடுத்து வருவதாகக் கூறினார்.

தில்லி ஹாட்டில் நடைபெற்று வரும் இந்திய ஆதி மகோத்சவ் திருவிழாவில் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் தின கொண்டாட்டத்தை மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகத்தின் இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் வளர்ச்சி கூட்டமைப்பு (டிரைஃபெட்) மற்றும் வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகம் நடத்தியது.

 

இந்தியாவில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட அயல்நாட்டு தூதரகங்களில் இருந்து 120-க்கும் அதிகமான அதிகாரிகளும், வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

டிரைஃபெட்டால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆதி மகோத்சவ் திருவிழாவில், பழங்குடியினரின் ஊட்டச்சத்து பொருட்கள், ஜவுளிகள் மற்றும் இயற்கை பொருட்கள் காட்சிக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டுள்ளன.

புதுதில்லி என் ஏவில் உள்ள தில்லி ஹாட்டில் 2021 பிப்ரவரி 15 வரை காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை இக்கண்காட்சி நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1697638

 

-----



(Release ID: 1697767) Visitor Counter : 158