நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
கோவிட் முழு ஊரடங்கு காலத்தில் உணவு தானியங்கள் விநியோகம் குறித்து மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
12 FEB 2021 3:20PM by PIB Chennai
மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணையமைச்சர் திரு தான்வே ராவ் சாகிப் தாதாராவ் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
* 2020-21ஆம் நிதியாண்டில் கொவிட்-19 பொது ஊரடங்கு காலத்தில், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 54815.367 ஆயிரம் டன்கள் உணவு தானியமும்( கோதுமை மற்றும் அரிசி) , பிரதமரின் ஏழைகள் நலன் உணவு திட்டத்தின் கீழ் 32105.502 ஆயிரம் டன்களும், தற்சார்பு இந்தியா உதவி திட்டத்தின் கீழ் 800.068, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் இல்லாத பயனாளிகளுக்கு கூடுதல் ஒதுக்கீடாக 965.907 ஆயிரம் டன்கள் உணவு தானியமும் வழங்கப்பட்டன.
* 2019-20 ஆம் ஆண்டில் குறைந்தபட்ச ஆதரவு விலையில், ஒரு குவின்டால் பொது ரக நெல் ரூ.1815க்கும், முதல் ரக நெல் ரூ.1,835க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.
* மத்திய தொகுப்புக்கு தமிழகத்தில் இருந்து 22.04 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. 22 மாநிலங்களில் இருந்து மொத்தம் 519.97 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
* காரீப் சந்தைப் பருவத்தில், 22 மாநிலங்களில் இருந்து மொத்தம் 1146.38 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது.
* 31.12.2020 ஆம் தேதி வரை 529.69 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் ( கோதுமை மற்றும் அரிசி) இருப்பு உள்ளது.
இந்திய உணவு கார்பரேஷன் நிறுவனம் மற்றும் மாநில முகமைகளின் மொத்த சேமிப்பு திறன் 819.19 லட்சம் மெட்ரிக் டன்.
* 2019-20ம் ஆண்டு காரிப் சந்தை பருவத்தில், 1035.96 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும், 1184.25 லட்சம் மெட்ரிக் டன் அரிசியும் உற்பத்தி செய்யப்பட்டது.
*****************
(வெளியீட்டு அடையாள எண்: 1697488)
வருகையாளர் எண்ணிக்கை : 224