நிதி அமைச்சகம்
பெங்களூரில் வருமானவரித்துறை சோதனை: ரூ.878.82 கோடி கணக்கில் காட்டப்படாத வருமானம் கண்டுபிடிப்பு
Posted On:
11 FEB 2021 5:55PM by PIB Chennai
பெங்களூரில் உள்ள முன்னணி மதுபான உற்பத்தி குழுமத்துக்கு சொந்தமாக நாடு முழுவதும் உள்ள 26 இடங்களில் வருமானவரித்துறை கடந்த 9ம் தேதி சோதனை நடத்தியது.
இந்த குழுமத்துக்கு சொந்தமாக உள்ள இடங்களில், பெங்களூரில் உள்ள முன்னணி கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து குடியிருப்பு மற்றும் வர்த்தக வளாகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
பெங்களூரில் உள்ள கட்டுமான நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து மேற்கொள்ளும் திட்டத்தின் மூலம் கிடைத்த ரூ.692.82 கோடி வருவாயை மறைத்தற்கான ஆவணங்கள் இந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும், இந்தக் குழுமம், முறைகேடான வழியில் ரூ.86 கோடிக்கு செலவு கணக்கை காட்டியுள்ளது.
மது விற்பனை மூலம் ரூ.74 கோடி அளவுக்கு கணக்கில் காட்டப்படாததும், கேரளாவில் உள்ள மது உற்பத்தி ஆலையில் நடந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஊழியர்கள் மற்றும் கூட்டாளிகள் பெயரில் பினாமி முதலீடுகள் பல ஆண்டுகளாக செய்யப்பட்டுள்ளன. உறவினர்கள் மற்றும் கூட்டாளிகள் பெயரில் ரூ.150 கோடி மதிப்பில் 35 சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை பினாமி சொத்துக்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
குழுமத்தின் இயக்குனர் பெயரில் வெளிநாட்டு சொத்துக்கள் இருப்பதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.
இந்த சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கை மூலம் ரூ.878.82 கோடி அளவுக்கு கணக்கில் காட்டப்படாத வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் விசாரணைகள் நடைப்பெற்று வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1697146
**
(Release ID: 1697245)