ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
உற்பத்தி தொடர்பான ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் மருத்துவ சாதனங்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க அனுமதி
Posted On:
11 FEB 2021 2:02PM by PIB Chennai
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், மருத்துவ சாதனங்கள் துறையில் அதிகளவிலான முதலீட்டை ஈர்க்கும் வகையிலும், மருத்துவ சாதனங்களின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க உற்பத்தியுடன் தொடர்பான ஊக்குவிப்பு திட்டத்தை மருந்துகள் துறை தொடங்கியுள்ளது.
இது 2020-21 ஆம் நிதியாண்டு முதல் 2027-28ம் ஆண்டு வரை, உள்நாட்டு உற்பத்தியாளர்கள் ரூ.3,420 கோடி மதிப்பிலான மருத்துவ சாதனங்கள் தயாரிப்பதை உறுதி செய்யும்.
புற்றுநோய் சிகிச்சை/ரேடியோ தெரபி மருத்துவ கருவிகள், ரேடியோலாஜி மற்றும் இமேஜிங் மருத்துவ கருவிகள், நியூக்ளியர் இமேஜிங் கருவிகள், மயக்கமருந்து மற்றும் இதய - சுவாச மருத்துவ கருவிகள், உடலுக்குள் பொருத்தக்கூடிய எலக்ட்ரானிக் கருவிகள் ஆகியவற்றுக்கான விண்ணப்ஙகள் வரவேற்கப்பட்டன.
இந்த மருத்துவ சாதன ஆலைகளை உருவாக்க, நிறுவனங்கள் ரூ.729.63 கோடி முதலீடு செய்யும். இதன் மூலம் 2,304 வேலை வாய்ப்புகள் உருவாகும். இதன் வர்த்தக உற்பத்தி 2022ம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு தொகையாக 5 ஆண்டு காலத்துக்கு அரசு வழங்கும் தொகை விண்ணப்பம் ஒன்றுக்கு ரூ.121 கோடியாக இருக்கும். இந்த ஆலைகள் உருவாக்கப்படுவது, மருத்துவ சாதனங்கள் தயாரிப்பில், இந்தியாவை தற்சார்புடையதாக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1697065
-----
(Release ID: 1697140)
Visitor Counter : 301