சுற்றுலா அமைச்சகம்

ஒற்றுமைக்கான சிலை அமைந்திருக்கும் கேவாடியாவில் நடைபெறவிருக்கும் உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர்களின் வருடாந்திர மாநாட்டிற்கு சுற்றுலா அமைச்சகம் ஆதரவு

இடுகை இடப்பட்ட நாள்: 10 FEB 2021 7:15PM by PIB Chennai

2021 பிப்ரவரி 12 முதல் 14 வரை ஒற்றுமைக்கான சிலை அமைந்திருக்கும் கேவாடியாவில் நடைபெறவிருக்கும் உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் வருடாந்திர மாநாட்டிற்கு மத்திய சுற்றுலா அமைச்சகம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இது குறித்து புதுதில்லியில் இன்று பேசிய சுற்றுலா செயலாளர் திரு. அர்விந்த் சிங், பொதுமுடக்கத்திற்கு பின் சுற்றுலா சார்ந்த சங்கம் ஒன்றால் நடத்தப்படும் முதல் பெரிய நிகழ்ச்சி இதுவென்றும், 350-இல் இருந்து 400 பேர் வரை இதில் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒற்றுமைக்கான சிலைக்கு எட்டு ரயில்களை 2021 ஜனவரி 17 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி துவக்கி வைத்ததையும் திரு சிங் நினைவு கூர்ந்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1696876

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1696929) வருகையாளர் எண்ணிக்கை : 184
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Gujarati