எஃகுத்துறை அமைச்சகம்

உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தில் ‘சிறப்பு எஃகு'

இடுகை இடப்பட்ட நாள்: 10 FEB 2021 12:52PM by PIB Chennai

எஃகு துறையில் மூலதன முதலீடுகளை ஈர்த்து, வேலை வாய்ப்புகளை உருவாக்கி, தொழில்நுட்பத்தின் தரம் உயர்த்தலை ஊக்குவிப்பதன் வாயிலாக  ‘சிறப்பு எஃகின்' உற்பத்தியை மேம்படுத்துவதற்காக 5 வருட காலத்தில் ரூ. 6322 கோடி நிதி ஒதுக்கீட்டில் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தில்சிறப்பு எஃகைசேர்ப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில்சிறப்பு எஃகின்' இருப்பை உறுதி செய்து, நாட்டை தற்சார்பு அடையச் செய்ய இந்த நடவடிக்கை உதவிகரமாக இருக்கும். கட்டுப்பாடில்லாத, வெளிச்சந்தையின் சூழ்நிலையில், தேவை மற்றும் இருப்பின் சந்தை நிலையைப் பொருத்தும், கச்சாப் பொருட்களின் விலையின் அடிப்படையிலும், சர்வதேச எஃகு வர்த்தகத்தை கருத்தில் கொண்டும் உள்நாட்டு எஃகின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இந்தத் தகவலை மத்திய எஃகு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், மாநிலங்களவையில்  எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1696702

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1696766) வருகையாளர் எண்ணிக்கை : 180
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Manipuri , Urdu , Marathi