ஊரக வளர்ச்சி அமைச்சகம்

பயன்பாட்டில் இல்லாத சொத்துக்களை முறைப்படுத்துவதில் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் பங்கு

Posted On: 09 FEB 2021 4:15PM by PIB Chennai

மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தனது நிதிநிலை அறிக்கை உரையில், அரசின் அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்களிடம் உள்ள பயன்படுத்தாத சொத்துக்களைப் பற்றி குறிப்பிட்டார். பயன்பாட்டில் இல்லாத சொத்துக்கள் தற்சார்பு இந்தியாவின் உருவாக்கத்திற்கு உதவாது என்று அவர் தெரிவித்தார். அபரிமிதமான அரசு நிலங்களை கண்டறிதல், சந்தை மதிப்பீட்டின்படி நிலத்திற்கு விலையை நிர்ணயம் செய்தல், நிலத்தின் உரிமையை மாற்றுதல் போன்ற முக்கிய பணிகளில் மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் ஈடுபடலாம்.

முதற்கட்டமாக சம்பந்தப்பட்ட துறைகளினால் பயன்படுத்தப்படாத நிலங்களைக் கண்டறிவதில், இதற்கென உருவாக்கப்படும் சிறப்பு நோக்க அமைப்பிற்கு இந்தத் துறை உதவிகளை வழங்கலாம். அதைத் தொடர்ந்து, அபரிமிதமான அரசின் நிலங்களுக்கு உரிய மதிப்பீட்டை வழங்குவதிலும் இந்தத் துறை சிறப்பு நோக்க அமைப்புடன் இணைந்து செயல்படலாம். இறுதியாக நிலத்தின் உரிமையை தகுந்த முறையில் சட்டத்திற்குட்பட்டு மாற்றுவதிலும் ஊரக மேம்பாட்டுத் துறை முக்கிய பங்கு வகிக்கலாம்.

குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுகை குறித்தும் நிதியமைச்சர் தமது உரையில் பேசினார். இதனை டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீனமயமாக்கல் திட்டம் செயல்படுத்துகிறது. இந்த மத்திய அரசின் திட்டம் ரூ. 950 கோடி மதிப்பீட்டில் 2020- 21 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாட்டில் வெளிப்படையான மற்றும் ஒருங்கிணைந்த நிலத் தகவல் மேலாண்மை அமைப்பை உருவாக்குவதற்காகவும், நில ஆவணங்களை டிஜிட்டல் மற்றும் நவீனமயமாக்கவும் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆவணங்களை மின்னணு மயமாக்கும் பணிகள் 90 சதவீதத்திற்கும் மேலாக நிறைவடைந்துள்ளது. குடி மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக ஆவணங்கள் மற்றும் சொத்துக்களைப் பதிவு  செய்வதற்காக ஒரே தேசம் ஒரே மென்பொருள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

*****************



(Release ID: 1696587) Visitor Counter : 167