ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

‘இந்திய மருந்துகள் & இந்திய மருத்துவ உபகரணங்கள் 2021’-இன் 6-வது பதிப்பு பிப்ரவரி 25-26 மற்றும் மார்ச் 1-2 ஆகிய தேதிகளில் நடைபெறும்

Posted On: 08 FEB 2021 4:36PM by PIB Chennai

இந்திய மருந்துகள் & இந்திய மருத்துவ உபகரணங்கள் 2021’-இன் 6-வது பதிப்பின் முன்னோட்டமாக பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் திரு டி வி சதானந்த கவுடா மற்றும்  மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் இணை அமைச்சர் திரு மன்சுக் மண்டாவியா ஆகியோர் பேசினார்.

மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் மருந்துகள் துறை, இந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் இன்வெஸ்ட் இந்தியா ஆகியவை இணைந்து நடத்தும் இந்திய மருந்துகள் & இந்திய மருத்துவ உபகரணங்கள் 2021’-இன் 6-வது பதிப்பு, பிப்ரவரி 25-26 மற்றும் மார்ச் 1-2 ஆகிய தேதிகளில் நடைபெறும்

ஊடகங்களிடம் பேசிய திரு கவுடா, 2030-ஆம் ஆண்டுக்குள் 130 பில்லியன் டாலர்கள் என்னும் அளவுக்கு இந்திய மருந்துகள் சந்தை வளரும் என்று கூறினார். மேக் இன் இந்தியா திட்டத்திற்கு இந்திய மருந்துகள் & இந்திய மருத்துவ உபகரணங்கள் 2021’ நிகழ்ச்சி ஊக்கமளிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

திரு மன்சுக் மண்டாவியா பேசுகையில், கொவிட்டுக்கு எதிரான அதன் போருக்காக சர்வதேச அளவில் இந்தியா புகழப்படுவதாக கூறினார். மருந்துகள் மற்றும் உபகரணங்கள் துறையில் நாட்டின் வலிமையை எடுத்துக்காட்ட ஒட்டுமொத்த உலகத்திற்காக அவற்றை இந்தியாவில் தயாரிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1696190

******************


(Release ID: 1696335) Visitor Counter : 196