நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் முன்னேற்றம் குறித்து உணவுத்துறை செயலாளர் ஆய்வு

Posted On: 08 FEB 2021 5:21PM by PIB Chennai

நாட்டில் உள்ள  32 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக  நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் போது மத்திய நிதியமைச்சர்  திருமதி நிர்மலா சீதாராமன் பேசினார்.  இதையடுத்து இத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரசேதங்களுடன்  காணொலி காட்சி மூலம் ஆய்வு நடத்தினார்.

எலக்ட்ரானிக் இயந்திரங்களை பொருத்துவது, பயனாளிகளின் ஆதார் எண்களை இணைப்பது, பயோமெட்ரிக் தகவல்களை சரிபார்த்தபின் பொருட்கள் வழங்குவது, மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு இடையேயும் பரிமாற்றங்களை மேற்கொள்வது போன்றவற்றை பின்பற்ற வேண்டும் என மாநிலங்களை உணவுத்துறை செயலாளர் கேட்டுக் கொண்டார்.

இத்திட்டத்தின் அமலாக்கத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், விழிப்புணர்வு திட்டம் ஆகியவை குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.   ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு சீர்திருத்தத்தை நிறைவேற்றியதற்காக மாநில மொத்த உ.ற்பத்தியில் 0.25 சதவீத அளவுக்கு கூடுதல் கடன் பெறுவதற்கான மனுவை பிப்ரவரி 15ம் தேதிக்குள் தாக்கல் செய்யும் படியும்  உணவுத்துறை செயலாளர்  கேட்டுக் கொண்டார்.

 

காரீப் நெல் கொள்முதல்

 காரீப் சந்தைப் பருவத்தில் கடந்த 7ம் தேதி வரை 616.43 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு இதே காலகட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் உற்பத்தியை விட 17.52 சதவீதம் அதிகம். நெல் கொள்முதலுக்காக கடந்த 7ம் தேதி வரை விவசாயிகளுக்கு ரூ. 1,16,382.24 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கப்பட்டுள்ளது.

*******************(Release ID: 1696330) Visitor Counter : 196