விவசாயத்துறை அமைச்சகம்

வேளாண் இயந்திரமயமாக்கலை ஊக்குவிப்பதற்கான இந்திய அரசின் திட்டங்கள்

Posted On: 08 FEB 2021 5:40PM by PIB Chennai

பயிர்களின் விளைச்சல் மற்றும் விவசாய உற்பத்தி திறன் மேம்பாட்டில் சிறந்த பங்களிப்பை வழங்கும் வேளாண் இயந்திரமயமாக்கலை ஊக்குவிப்பதற்கான திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

நாட்டில் வேளாண் இயந்திரமயமாக்கலை ஊக்கப்படுத்துவத்தும் நோக்கில், ‘வேளாண் இயந்திரமயமாக்கலுக்கான துணை இயக்கம்என்னும் சிறப்பு திட்டம் 2014-15-ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது..

2014-15-ஆம் ஆண்டு முதல் 2019-20-ஆம் ஆண்டு வரை, மாநிலங்கள் மற்றும் இதர செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் ரூ 4556.93 கோடி வழங்கப்பட்டுள்ளது. 13 லட்சம் வேளாண் இயந்திரங்கள் இது வரை விநியோகிக்கப்பட்டுள்ளன. 2021-22-ஆம் ஆண்டுக்கு ரூ 1050 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முந்தைய வருடத்தின் ஒதுக்கீட்டை விட இது அதிகமாகும்.

ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் தில்லி தேசிய தலைநகர் பகுதியில் காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காகவும், பயிர் கழிவுகளின் மேலாண்மைக்கு தேவைப்படும் இயந்திரங்களுக்கு மானியம் வழங்குவதற்காகவும், 2018 பட்ஜெட் அறிவிப்பை தொடர்ந்து சிறப்பு திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டம் 2020-21-ஆம் ஆண்டுக்கும் நீட்டிக்கப்பட்டு, 2018-19 முதல் 2020-21 வரை இம்மாநிலங்களுக்கு ரூ 1726.67 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கும், 30,961 வாடகை மையங்களுக்கும் 1.58 லட்சம் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

2016-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் 30 சதவீதம் அளவுக்கு வைக்கோல் எரித்தல் நிகழ்வுகள் குறைந்துள்ளன.

******************



(Release ID: 1696329) Visitor Counter : 192