சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

58 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பூசி , இன்று மட்டும் 28,059 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

Posted On: 07 FEB 2021 8:11PM by PIB Chennai

நாட்டில் கொவிட்-19 தடுப்பு மருந்து பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 58 லட்சத்தைத் தாண்டி உள்ளது.

அசாம், பீகார், குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மணிப்பூர், ஒடிசா, ராஜஸ்தான், திரிபுரா மற்றும் உத்தரகண்ட் ஆகிய 12 மாநிலங்களில் இன்று தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

இதுவரை 1,16,478 முகாம்களில் 58,03,617 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இன்று மாலை 6.40 மணி நிலவரப்படி இன்று மட்டும்  1,295 முகாம்களில்  12,978 சுகாதார பணியாளர்கள், 15,081 முன்கள ஊழியர்களாக மொத்தம் 28,059 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இறுதி தகவல்கள் இன்று பின்னிரவு கிடைக்கும். தமிழ்நாட்டில் இதுவரை 1,66,408 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1696006

------


(Release ID: 1696030)