சுற்றுலா அமைச்சகம்

இயற்கை சுற்றுலா குறித்த இணைய வழி கருத்தரங்கை நடத்தியது சுற்றுலாத்துறை அமைச்சகம்

Posted On: 07 FEB 2021 1:02PM by PIB Chennai

‘நமது தேசத்தை பார்’ என்ற இணைய கருத்தரங்கு தொடரின் வரிசையில் இயற்கை சுற்றுலா குறித்த இணைய கருத்தரங்கை சுற்றுலாத்துறை கடந்த 6ம் தேதி நடத்தியது.

கொவிட் -19 சூழலுக்குப்பின் சுற்றுலாத் தலங்களுக்கு மக்கள் கூட்டமாக செல்வது குறைந்து, கூட்டம் குறைவாக உள்ள இயற்கையான பகுதிகளுக்கு சுற்றுலா செல்வது, இரவு நேரத்தில் நட்சத்திர கூட்டங்களுடன் வானம் பிரகாசமாக தெரியும் பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் போக்கு அதிகரித்து வருகிறது.

இந்த சூழலில்  இத்தகைய இயற்கை அடிப்படையிலான சுற்றுலா குறித்து இணைய கருத்தரங்கை ‘‘வான் சார் சுற்றுலா - இயற்கை அடிப்படையிலான சுற்றுலாவின் அடுத்த எல்லை’’ என்ற தலைப்பில் சுற்றுலா அமைச்சகம் நடத்தியது. 

இதில் பேசிய சுற்றுலா அமைச்சகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர், திருமதி ருபிந்தர் பிரார், ‘‘வான் சார் சுற்றுலா  என்ற புதிய முறை, உலகம் முழுவதும் பிரபலம் அடைந்து வருகிறது.

இயற்கை அடிப்படையிலான சுற்றுலாத் தலங்கள் இந்தியாவில் அதிகம் உள்ளன. அதிகம் அறியப்படாத, இயற்கை சூழ்ந்த பகுதிகளில் உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும்’’ என்றார்.

இந்த வான் சார் சுற்றுலா குறித்த தகவல்களை குளோபல் ஹிமாலயன் பயண நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு ஜெய்தீப் பன்சால், திட்டக்குழு தலைவர்  திருமதி சோனால் அஸ்கோர்தா, வளர்ச்சிக்கான வானியல் அலுவலகத்தின் இயக்குனர் திரு கெவின் கோவேந்தர் ஆகியோர் விளக்கினர்.

வான்சார் சுற்றுலாவை பயன்படுத்தி, நாட்டின் தொலை தூர பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1695923

------



(Release ID: 1695973) Visitor Counter : 442