சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

56 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, 2,20,019 பேருக்கு இன்று மட்டும் வழங்கப்பட்டுள்ளது

Posted On: 06 FEB 2021 7:58PM by PIB Chennai

நாட்டில் கொவிட்-19 தடுப்பு மருந்து பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 56 லட்சத்தை தாண்டி உள்ளது.

நாடு தழுவிய மாபெரும் கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல் திட்டத்தின் 22-ஆம் நாளான இன்று மட்டும் 2,20,019 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

1,14,548 முகாம்களில் 56,36,868 சுகாதாரம் மற்றும் முன்கள  பணியாளர்களுக்கு இன்று மாலை 6 மணி வரை வரை தடுப்பூசி போடப்பட்டதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தடுப்பபூசிகள் போடப்படுகின்றன.

 இன்றைய பயனாளிகளில் 85 சதவீதம் பேர் 12 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இறுதி தகவல்கள் இன்று பின்னிரவு கிடைக்கும். தமிழ்நாட்டில் இதுவரை 1,63,592 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உலகின் மாபெரும் தடுப்புமருந்து வழங்கல் நடவடிக்கைகளில் ஒன்றான இந்தியாவின் கொவிட் தடுப்பூசி விநியோக செயல்முறை, 2021 ஜனவரி 16 அன்று பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட ஆங்கில செய்திக் குறிப்பை பார்க்கவும்

 

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1695847

 ------


(Release ID: 1695874) Visitor Counter : 125