மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
கொவிட்-19 தொற்றுக்கு இடையே ஆன்லைன் கல்வி வழங்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்: மத்திய அமைச்சர் பதில்
Posted On:
04 FEB 2021 4:59PM by PIB Chennai
மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் மாநிலங்களவையில் அளித்த பதிலில் கூறியதாவது:
* கொவிட் -19 தொற்றுக்கு இடையே, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. டிஜிட்டல் கல்விக்காக பாரத் நெட் திட்டத்தின் கீழ் பிரக்யதா என்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டுதல்களை கீழ்கண்ட இணைப்பில் காணலாம்.
https://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/pragyata-guidelines_0.pdf
* பாரத் நெட் திட்டத்தின் கீழ் இண்டெர்
நெட் இணைப்பு அரசு நிறுவனங்களில் உள்ளது. ஊரகப் பகுதிகளில் இணைய தள இணைப்பை ஏற்படுத்த மத்திய மின்னனுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சிஎஸ்சி இந்திய இ-நிர்வாக சேவைகள் நிறுவனம் (CSC-SPV) மூலம் பள்ளிகள் உள்பட அரசு நிறுவனங்களுக்கு கண்ணாடியிழை கேபிள் இணைப்பு வழங்கப்படுகிறது. கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு இணையதள இணைப்பு வழங்குவதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
* மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, அனைத்தும் உள்ளடக்கிய கல்வியை வழங்குவதற்காக ‘சமக்ரா சிக்ஷா’ என்ற திட்டத்தை பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு துறை வழங்குகிறது.
* இதில் சிறப்பு குழந்தைகளுக்கான பாடத்திட்டமும் உள்ளது. இதன் மூலம் சிறப்பு குழந்தைகள், வழக்கமான பள்ளிகளில் கல்வி கற்க முடியும்.
* அறிவுசார் சொத்துரிமை பற்றி தெரிந்து கொள்ள ‘அறிவுசார் சொத்துரிமைக்கான இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பிரசாரத்துக்கான கலாம் திட்டத்தை ( கபிலா) மத்திய அரசு கடந்தாண்டு அக்டோபர் 15ம் தேதி தொடங்கியது. உயர் கல்வி நிறுவனங்களில், அறிவுசார் சொத்துரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இத்திட்டத்தின் நோக்கமாகும்
------
(Release ID: 1695266)
Visitor Counter : 214