சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

போக்குவரத்து துறையில் நிலையான மாற்று பயண தீர்வுகளை உருவாக்கும் நடவடிக்கை தொடரும்

प्रविष्टि तिथि: 04 FEB 2021 3:55PM by PIB Chennai

போக்குவரத்து துறையில் நிலையான மாற்று பயண தீர்வுகளை உருவாக்கும் நடவடிக்கை தொடரும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

ரோப் கார் போக்குவரத்து மற்றும் மாற்று போக்குவரத்து தீர்வுகளை உருவாக்குவது குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பரிசீலிக்கும். இதற்கான ஒழுங்குமுறை அமைப்பை ஏற்படுத்துவது,  ஆராய்ச்சி, புதிய தொழில்நுட்பம் போன்ற  நடவடிக்கை போக்குவரத்து துறையில் ஊக்குவிப்பாக இருக்கும். இதற்காக கடந்த 1961ம் ஆண்டு தொழில் ஒதுக்கீடு சட்ட திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோப் கார் போக்குவரத்து மற்றும் மாற்று போக்குவரத்து தீர்வுகளுக்கான தொழில்நுட்பம் ஆகியவற்றை மேம்படுத்தும் பொறுப்பு போக்குவரத்து அமைச்சகத்துக்கு உள்ளது.

நகர்ப்புறம், மலைப்பிரதேச  போக்குவரத்தில், நீடித்த மாற்றுத் தீர்வுகளை உருவாக்குவதில், எங்களின் நடவடிக்கை வெற்றியடையும். நாட்டின் போக்குவரத்து துறை மேம்பாட்டுக்கு ரோப் கார் மற்றும் மாற்று போக்குவரத்தை உருவாக்குவது முக்கியமானது. நாட்டில் வளர்ந்து வரும் போக்குவரத்து, மாறுபட்ட நிலப் பகுதிகள் ஆகியவை காரணமாக, அனைத்து தீர்வுகளையும் அமல்படுத்த வேண்டியது அவசியம்.

இவ்வாறு நிதின்கட்கரி தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1695134

--------


(रिलीज़ आईडी: 1695196) आगंतुक पटल : 244
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi