வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

வடகிழக்குப் பகுதித் திட்டங்கள் மறு ஆய்வு : டாக்டர் ஜித்தேந்திர சிங் தகவல்

Posted On: 04 FEB 2021 12:39PM by PIB Chennai

மத்திய வடகிழக்குப் பகுதி மேம்பாட்டு இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

* வடகிழக்குப் பகுதித் திட்டங்களை மறு ஆய்வு செய்ய, நிதி ஆயோக் 17 துணைக் குழுக்களை அமைத்துள்ளது. இதில் சிவில் சொசைட்டி அமைப்பு, மத்திய அமைச்சகங்கள், துறைகள் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் 17 துறைகளில், செயல் திட்டங்களுடன் பணியாற்றுவர். நிதியமைச்சகத்தின் உத்தரவுப்படி, வடகிழக்குப் பகுதித் திட்டங்கள் 14-வது நிதி ஆணையக் காலத்துக்குப் பின்பும் தொடரும். இதற்குத் தன்னிச்சையான மதிப்பீடுத் தேவை. வடகிழக்கு கவுன்சில் அமல்படுத்திய திட்டங்களின் மதிப்பீடு முடிவடைந்து விட்டது.

* 8 வடகிழக்கு மாநிலங்களில் கொவிட் எதிர்ப்பு நடவடிக்கையின் போது, மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களைக் குறைப்பதற்கு ரூ.25 கோடியை  வடகிழக்கு மேம்பாட்டு அமைச்சகம் வழங்கியது.

இவ்வாறு டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1695066

*******

(Release ID: 1695066)



(Release ID: 1695110) Visitor Counter : 140