குடியரசுத் தலைவர் செயலகம்

கர்நாடகா மற்றும் ஆந்திராவில் பிப்ரவரி 4 முதல் 7 வரை குடியரசுத் தலைவர் பயணம் மேற்கொள்ளவுள்ளார்

Posted On: 03 FEB 2021 6:09PM by PIB Chennai

கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 2021 பிப்ரவரி 4 முதல் 7 வரை குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

2021 பிப்ரவரி 4 மாலை அன்று பெங்களூருவுக்கு புறப்படவுள்ள குடியரசுத் தலைவர், 2021 பிப்ரவரி 5 அன்று பெங்களூரு யெலஹங்காவில் உள்ள விமானப்படை தளத்தில் நடைபெறவுள்ள ஏரோ இந்தியா-21-இன் நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

குடகு மாவட்டம் மடிகேரியில் உள்ள ஜெனரல் திம்மையாவின் மூதாதையர் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை 2021 பிப்ரவரி 7 அன்று குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார். அன்றைய தினமே, பெங்களூருவில் உள்ள ராஜிவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் 23-வது வருடாந்திர பட்டமளிப்பு விழாவிலும் அவர் கலந்து கொள்கிறார்.

2021 பிப்ரவரி 7 அன்று ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மதனப்பள்ளியில் இருக்கும் சத்சங் ஃபவுண்டேஷனின் ஆசிரமம் மற்றும் சாடமில் இருக்கும் பீப்பல் குரோவ் பள்ளி ஆகியவற்றையும் குடியரசுத் தலைவர் பார்வையிடுகிறார். பின்னர் அவர் புதுதில்லி திரும்புகிறார்.

------

 


(Release ID: 1694964) Visitor Counter : 160