சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தலைமையில் இந்திய குழந்தைகள் மருத்துவ அகாடமியின் 58-வது தேசிய மாநாடு
Posted On:
03 FEB 2021 3:19PM by PIB Chennai
இந்திய குழந்தைகள் மருத்துவ அகாடமியின் 58-வது தேசிய மாநாட்டில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி வாயிலாக இன்று கலந்துகொண்டார்.
இந்திய குழந்தைகள் மருத்துவ அகாடமியின் பணிகளைப் பாராட்டிய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், “குழந்தைகள் மருத்துவத்தில் இந்திய குழந்தைகள் மருத்துவ அகாடமி இந்திய அரசுடன் இணைந்து தொடர்ந்து பணிபுரிந்து வருவதை நான் அறிவேன். போலியோ ஒழிப்பு, நோய் தடுப்பு, சத்தில்லா உணவுகள் மீதான வழிகாட்டு நெறிமுறைகள், பெருந்தொற்று காலத்தில் அரசுக்கு ஆதரவு வழங்கியது, தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் பங்கேற்றல், ஊட்டச்சத்து குறைபாடுகளை களைதல், பதின்பருவ மருத்துவம் போன்ற துறைகளில் உங்களது பணி தலைச்சிறந்ததாக உள்ளது”, என்று கூறினார். மாற்றியமைக்கப்பட்ட நவ்ஜாத் சிஷு சுரக்ஷா கார்யகிரம் பிரிவின் அடிப்படையில் இணையதள சேவைகளை நீங்கள் தயாரித்துள்ளதற்கு எனது பாராட்டுக்கள். இந்திய குழந்தைகள் மருத்துவ அகாடமி, தனது இணையதளத்தின் வாயிலாக கடந்த சில ஆண்டுகளாக சிறப்பான பயிற்சியை வழங்குகிறது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு திட்டங்களான டிஜிட்டல் இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியாவை நிறைவேற்றும் வகையில் இந்திய குழந்தைகள் மருத்துவ அகாடமி பணியாற்றுகிறது”, என்றும் அவர் தெரிவித்தார்.
“யுனிசெப் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் இந்திய குழந்தைகள் மருத்துவ அகாடமியின் முக்கிய திட்டமான இளம் குழந்தை வளர்ச்சி திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்படுவதுடன் எதிர்கால குடிமக்கள் முழுத் திறனை வெளிப்படுத்துவதை உறுதி செய்யும்” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1694737
-----
(Release ID: 1694919)
Visitor Counter : 177