பாதுகாப்பு அமைச்சகம்

ஏரோ இந்தியா 2021 நிகழ்ச்சியில், இந்திய பெருங்கடல் பகுதி நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாடு

Posted On: 03 FEB 2021 4:38PM by PIB Chennai

ஏரோ இந்தியா கண்காட்சிக்கு இடையே இந்திய பெருங்கடல் பகுதி நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டை இந்தியா நடத்துகிறது.

ஆசியாவின் மிகப் பெரிய விமான கண்காட்சியான, ஏரோ இந்தியா கண்காட்சி பெங்களூருவில் இன்று முதல் 5 ஆம்தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சிக்கு இடையே இந்திய பெருங்கடல் பகுதி நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டை இந்தியா நடத்துகிறது.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைதி மற்றும் பாதுகாப்பை அதிகரிப்பதில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்காக இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறை செயலாளர் மற்றும் பல  இந்திய பெருங்கடல் பகுதி நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் உரையுடன், இந்நிகழ்ச்சி தொடங்குகிறது. நிறைவுநாள் நிகழ்ச்சியில், பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் உரையாற்றுகிறார்.

இதில் மாலத்தீவு, கமோராஸ், ஈரான் மற்றும் மடகாஸ்கர்  நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள், ஆஸ்திரேலியா, கென்யா, செசல்ஸ், மொரிசீயஸ், குவைத் மியான்மர் ஆகிய நாடுகளின் தூதர்கள் உட்பட 18 நாடுகளின் பிரதிநிதிகள் நேரில் கலந்து கொள்ள உறுதியளித்துள்ளனர்.

சில நாடுகளின் பிரதிநிதிகள் காணொலி காட்சி மூலம் கலந்து கொள்கின்றனர். சிலர் ஒளிப்பதிவு உரை அனுப்பவுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1694780

------(Release ID: 1694842) Visitor Counter : 336