சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

தேசிய பிற்படுத்தப்பட்ட பிரிவினர் நிதி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பிரிவின் சுகாதார பணியாளர்களுக்கு கொவிட் தடுப்புமருந்து வழங்கல் பயிற்சி

प्रविष्टि तिथि: 02 FEB 2021 5:32PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின் படி, தேசிய பிற்படுத்தப்பட்ட பிரிவினர் நிதி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பிரிவின் செவிலியர்கள், மருத்துவ மற்றும் செவிலியர் மாணவர்கள் மற்றும் மருந்தாளுனர்களுக்கு கொவிட் தடுப்புமருந்து வழங்கல் பயிற்சி வழங்குவதற்காக தேசிய பிற்படுத்தப்பட்ட பிரிவினர் நிதி மற்றும் வளர்ச்சி நிறுவனம் மற்றும் அப்போலோ மெட்ஸ்கில்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

சுகாதாரப் பணியாளர்களின் திறன் அளவுகளை மேம்படுத்துவதற்கும், தேசிய தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கைக்கு வலு சேர்ப்பதற்கும் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிகார், தில்லி, தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 1000 பேருக்கு பயிற்சி வழங்க தேசிய பிற்படுத்தப்பட்ட பிரிவினர் நிதி மற்றும் வளர்ச்சி நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் பயிற்சி தொடங்கும்.

மேற்கண்ட தகவலை மத்திய சமுக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் திரு கிரிஷன் பால் குர்ஜார் நாடாளுமன்றத்தின் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த போது தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1694468

----


(रिलीज़ आईडी: 1694611) आगंतुक पटल : 200
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Manipuri , Punjabi