ஆயுஷ்
பாரம்பரிய மருத்துவ ஆராய்ச்சிக்காக 25 நாடுகளுடன் ஒப்பந்தம், யோகா கல்விக்கு ஊக்கம் உள்ளிட்ட அறிவிப்புகள்
Posted On:
02 FEB 2021 5:10PM by PIB Chennai
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்து பூர்வமாக பதிலளித்த மத்திய ஆயுர்வேத, யோகா & இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி இணை அமைச்சர் (கூடுதல் பொறுப்பு) திரு கிரண் ரிஜிஜூ கீழ்கண்ட தகவல்களை அளித்தார்.
பாரம்பரிய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் ஆராய்ச்சிக்காக இது வரை 25 நாடுகளுடன் ஆயுஷ் அமைச்சகம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது,
நேபாளம், வங்கதேசம், ஹங்கேரி, டிரினிடாட் & டொபாக்கோ, மலேசியா, சர்வதேச சுகாதார அமைப்பு ஜெனிவா, மொரீஷியஸ், மங்கோலியா, டர்க்மெனிஸ்தான், மியன்மர், ஜெர்மனி (கூட்டு பிரகடனம்), இரான், சாவோ டோம் & பிரின்சிபே, ஈக்வடோரியல் கினியா, கியூபா, கொலம்பியா, ஜப்பான், பொலிவியா, காம்பியா, கினியா குடியரசு, சீனா, செயிண்ட் வின்செண்ட் & தி கிராடின்ஸ், சுரிநாம், பிரேசில் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய் நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டுள்ளன.
மத்திய அளவில் தற்சமயம் யோகா கல்விக்கான ஒழுங்குமுறை இல்லை. ஆனால், ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி பெற்ற நிறுவனமான புதுதில்லியில் உள்ள மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் பல்வேறு யோகா படிப்புகளை நடத்துகிறது. முதுநிலை, இளநிலை, பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளை இந்நிறுவனம் வழங்குகிறது.
ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய மருத்துவ குணம் கொண்ட தாவரங்களுக்கான வாரியம், தன்னுடைய ‘மருத்துவ குணம் கொண்ட தாவரங்களின் பாதுகாப்பு, மேம்பாடு மற்றும் நீடித்த மேலாண்மை திட்டத்தின்’ கீழ், பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.
இது தவிர, நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசு ஆராய்ச்சி நிறுவனங்களும் தாவரங்கள் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளன. ஆயுர்வேத அறிவியல்களுக்கான மத்திய ஆராய்ச்சிக் குழு மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் காரணமாக 24 புதிய மருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, ஆயுஷ் அமைச்சகத்தின் திறன்மிகு மையங்கள் திட்டம் குறித்து சந்தை ஆராய்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டு மையம் நடத்திய மதிப்பீட்டில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயுஷ் சார்ந்த சுகாதார தீர்வுகளுக்கான புதுமையான திட்டங்களுக்கு இத்திட்டம் ஊக்கமளித்து வருவது குறித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் கேரளா உள்ளிட்ட 10 பல்வேறு மாநிலங்களில் உள்ள 18 திறன்மிகு மையங்கள் இந்த ஆய்வில் மதிப்பிடப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1694455
-----
(Release ID: 1694596)
Visitor Counter : 155