அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவியல், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பு கொள்கை உருவாக்கத்தில், வெளிநாட்டு தூதரகங்களின் அறிவியல் பிரதிநிதிகள் கருத்து
Posted On:
01 FEB 2021 9:37AM by PIB Chennai
அறிவியல், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பு கொள்கை உருவாக்கத்தில், வெளிநாட்டு தூதரகங்களின் அறிவியல் பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
5-வது தேசிய அறிவியல், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பு வரைவு கொள்கை குறித்த ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகின்றன.
இதில் இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதரங்களைச் சேர்ந்த அறிவியல் பிரதிநிதிகளும், இந்தியாவின் அறிவியல் கொள்கை உருவாக்கத்துக்கு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், கனடா, டென்மார்க், ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, நார்வே, போர்ச்சுக்கல், ரஷ்யா, இங்கிலாந்து , அமெரிக்கா உட்பட 20 நாடுகளின் தூதரகங்களைச் சேர்ந்த அறிவியல் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.
வெளிநாடுகளில் உள்ள இந்திய விஞ்ஞானிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்றும், ஒரே நாடு, ஒரே திட்டம் முறையை அமல்படுத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு மாநிலத்தில் தலைமை அறிவியல் ஆலோசகரை நியமிக்க வேண்டும் என அவர்கள் ஆலோசனை கூறினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1693802
(Release ID: 1693944)
Visitor Counter : 184