வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
பிரதமரின் கொள்கை மூலம் அண்டை நாடுகளுடனான நமது உறவில் புதிய பரிமாணம் ஏற்பட்டுள்ளது: டாக்டர் ஜிதேந்திர சிங்
प्रविष्टि तिथि:
30 JAN 2021 3:01PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் “கிழக்கு செயல்பாடு” கொள்கையின் மூலமாக அண்டை நாடுகளுடனான நமது அணுகுமுறை மற்றும் கவனத்தில் புதிய பரிமாணம் ஏற்பட்டுள்ளது என்று மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
பிலிப்பைன்ஸ் துணை அதிபர் திருமிகு மரியா லியோனார் ஜெரோனா ரோப்ரெடோ மற்றும் மிசோரம் முதல்வர் திரு சொராம்தங்காவுடன் இணைந்து ஆசிய பசிபிக் இளைஞர் கருத்து பரிமாற்ற கூட்டத்தில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், வட கிழக்கு மாகாண வளர்ச்சிக்கான அமைச்சராக உள்ள தமக்கு, வட கிழக்கு மாநிலமான மிசோரம் இந்த கூட்டத்தை நடத்துவது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.
சர்வதேச எல்லைகளால் சூழப்பட்டுள்ள வடகிழக்கு பகுதி இந்தியாவின் நுழைவுவாயிலாக இருப்பதாக கூறிய அவர், திரு நரேந்திர மோடி பிரதமரானது முதல் நாட்டின் வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சியின் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
பிரதமரின் தலையீட்டின் காரணமாக, இந்திய-வங்கதேச ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேறியது என்றும், இதன் மூலம் வங்க தேசம் மற்றும் பிற நாடுகளுடன் எளிதான மற்றும் செலவு குறைந்த அணுகுமுறை கிடைத்ததென்றும் அவர் நினைவுகூர்ந்தார்.
***************
(रिलीज़ आईडी: 1693573)
आगंतुक पटल : 241