உள்துறை அமைச்சகம்

குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியின் போது ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த காவலர்களை மருத்துவமனைகளுக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் நலம் விசாரித்தார்

Posted On: 28 JAN 2021 8:33PM by PIB Chennai

குடியரசு தினத்தன்று நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியின் போது ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த துணிச்சல் மிகு தில்லி காவலர்களை மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று நலம் விசாரித்தார்

சுஷ்ருதா மருத்துவ மையம் மற்றும் தீரத்ராம் மருத்துவமனைக்கு சென்ற திரு அமித் ஷா, அங்கு சிகிச்சை பெற்று வரும் காவலர்களை சந்தித்து, அவர்களின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.

தில்லி காவல் துறையின் தீரமிகு காவலர்களை இன்று மருத்துவமனையில் சந்தித்து, அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தினேன். குடியரசு தினத்தன்று நடைபெற்ற வன்முறையில் அவர்கள் காட்டிய துணிச்சலையும், உறுதியையும் கண்டு ஒட்டுமொத்த நாடும் பெருமையடைகிறது,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் உள்துறை அமைச்சர் பதிவிட்டுள்ளார்.

-------


(Release ID: 1693062) Visitor Counter : 181