பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

சுவாசக் கோளாறுகள் மற்றும் நுரையீரல் நோய்களுக்கான மருந்துகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களின் மீதான ஆர்வத்தை கொவிட்-19 அதிகரித்துள்ளது: டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 27 JAN 2021 6:06PM by PIB Chennai

மத்திய அமைச்சரும், புகழ்பெற்ற நீரிழிவு மருத்துவ நிபுணருமான டாக்டர் ஜிதேந்திர சிங், உலகத்தின் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க அளவிலான மாற்றங்களை கொவிட் பெருந்தொற்று உருவாக்கியுள்ளதாக கூறினார்.

மருத்துவத் துறையை பொருத்தவரை, சுவாச கோளாறுகள் மற்றும் நுரையீரல் நோய்களுக்கான மருந்துகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களின் மீதான ஆர்வத்தை கொவிட்-19 அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.

நீரிழிவு மற்றும் புற்றுநோய் துறைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்களும் சுவாச கோளாறுகள் மற்றும் நுரையீரல் நோய்களுக்கான மருந்துகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களின் மீது ஆர்வம் செலுத்தி வரும் வேளையில், இது குறித்து பொது மக்களும் அறிந்து கொள்ள விரும்புகின்றனர் என்று அவர் கூறினார்.

தேசிய நெஞ்சக மருத்துவர்களுக்கான கல்லூரி மற்றும் இந்திய நெஞ்சக சங்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்தநாப்கான்அகில இந்திய ஐந்து நாள் மாநாட்டில் தொடக்கவுரை ஆற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங் இவ்வாறு கூறினார்.

முன்பெல்லாம் நுரையீரல் நோய்களுக்கான மருந்துகள் காச நோய் தொடர்புடையதாக இருந்ததாகவும், இளம் மருத்துவராக அவர் தமது பணியை தொடங்கிய போது நெஞ்சக மருத்துவரென்றால், அவர் காச நோய்க்கு மட்டுமே சிகிச்சை அளிப்பார் என்ற தவறான எண்ணம் சமூதாயத்தில் நிலவியதாகவும் அமைச்சர் கூறினார்.

நுரையீரல் நோய்களுக்கான மருந்துகள் குறித்த மாநாடு இந்தியாவில் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்ட அவர், தனது 130 கோடி மக்கள் தொகைக்கு இடையிலும், கொவிட்டுக்கான தடுப்பு மருந்தை நமது நாடு வெற்றிகரமாக வழங்கி வருவதாகக் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆற்றல் மிகு நடவடிக்கைகளின் மூலமாக, சிறிய மக்கள் தொகை கொண்ட மேற்கத்திய நாடுகளை விட சிறப்பான முறையில் கொவிட்டை இந்தியா கையாண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

-----



(Release ID: 1692757) Visitor Counter : 167