நிதி அமைச்சகம்

குடியரசு தின விழாவை முன்னிட்டு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறையினருக்கு குடியரசுத் தலைவர் விருதுகள்

Posted On: 26 JAN 2021 4:09PM by PIB Chennai

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறையில், உயிரைப் பணயம் வைத்து போற்றத்தக்க வகையில் செயல்பட்டவர்கள் மற்றும் சிறப்பான சேவையாற்றியவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தலைவரின் விருதுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகள் குடியரசு தினத்துக்கு முதல் நாள் அறிவிக்கப்படும்.

இந்தாண்டு உயிரை பணயம் வைத்து போற்றத்தக்க வகையில் செயல்பட்ட 2 அதிகாரிகளும், பல ஆண்டுகாலமாக எந்த குறைபாடும் இன்றி சிறப்பாக செயல்பட்ட 22 அதிகாரிகளும் குடியரசுத் தலைவர் விருது மற்றும் பதக்கங்களுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

ஜோத்பூர், தில்லி மண்டல பிரிவு, வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தில், புலனாய்வு அதிகாரியாக பணியாற்றும் திரு விபின் பால், கொச்சி மண்டல பிரிவு  வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தில், புலனாய்வு அதிகாரியாக பணியாற்றும் திரு ஆல்பர்ட் ஜார்ஜ் ஆகியோர் உயிரை பணயம் வைத்து போற்றத்தக்க வகையில் செயல்பட்டதற்கான விருதுகளையும், பதக்கங்களையும் பெறுகின்றனர்.

22 அதிகாரிகள் சிறப்பாக சேவையாற்றியதற்கான விருதுகளையும், பதக்கங்களையும் பெறுகின்றனர்.

இவர்களின் முழு விவரம் கீழேயுள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1692500

**********************


(Release ID: 1692524) Visitor Counter : 258