எரிசக்தி அமைச்சகம்

அந்தமானில் மின்சார பேருந்து போக்குவரத்தை தொடங்கி வைத்தார் துணை நிலை ஆளுநர்

प्रविष्टि तिथि: 26 JAN 2021 4:58PM by PIB Chennai

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநர் அட்மிரல்(ஓய்வு) டி.கே.ஜோஷி, மின்சார பேருந்துகளை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இத்திட்டத்தை மின்துறை அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான என்டிபிசியின் துணை நிறுவனமான என்டிபிசி வித்யுத் வியாபார் நிகாம் லிமிடெட்(என்விவிஎன்) செயல்படுத்துகிறது.

அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில், மின்சார பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அங்கு காற்று மாசுவை குறைத்து, சொகுசான பொது போக்குவரத்துக்கு உதவும்.

மேலும், பெங்களூரு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 90 மின்சார பேருந்துகளை வழங்கும் ஒப்பந்தத்தையும் என்விவிஎன் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1692509

**********************


(रिलीज़ आईडी: 1692516) आगंतुक पटल : 286
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Punjabi