பாதுகாப்பு அமைச்சகம்
குடியரசு தினவிழாவை கொண்டாடியது அந்தமான் மற்றும் நிகோபார் படைப்பிரிவு
Posted On:
26 JAN 2021 4:36PM by PIB Chennai
அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரில் உள்ள நேதாஜி ஸ்டேடியத்தில், 72வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு பிரம்மாண்ட அணி வகுப்பை அந்தமான் மற்றும் நிகோபார் படைப்பிரிவு இன்று நடத்தியது. இதில் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநர் அட்மிரல் டி.கே.ஜோஷி(ஓய்வு) தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தரைப்படை, கடற்படை, விமானப்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை மற்றும் அந்தமான் மற்றும் நிகோபார் காவல்துறை பிரிவுகளின் அணிவகுப்புக்கு இந்திய கடற்படையின் லெப்டினன்ட் கமாண்டர் ஆர். மணிகண்டன் தலைமை தாங்கினார். அணிவகுப்பில் விமானப்படையின் எம்ஐ-17 ஹெலிகாப்டர், கடற்படையின் டோர்னியர் ரக விமானங்கள் அணி வகுத்து வந்தன.
இந்நிகழ்ச்சியின் போது, அரசு வழிகாட்டுதல்களும், கொவிட் நெறிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1692507
**********************
(Release ID: 1692515)
Visitor Counter : 220