பாதுகாப்பு அமைச்சகம்
குடியரசு தினக் கொண்டாட்டங்கள் 2021
Posted On:
25 JAN 2021 6:31PM by PIB Chennai
2021 ஜனவரி 26 அன்று நடைபெறவுள்ள 72-வது குடியரசு தின விழவில் இந்தியாவின் ராணுவ வலிமை, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவை புதுதில்லியில் உள்ள கம்பீரமான ராஜபாதையில் காட்சிப்படுத்தப்படும்.
17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 32 அலங்கார ஊர்திகள், பல்வேறு அமைச்சகங்கள்/துறைகளில் இருந்து ஒன்பது அலங்கார ஊர்திகள், பாதுகாப்பு அமைச்கத்தின் ஆறு அலங்கார ஊர்திகள் ஆகியவை நாட்டின் கலாச்சார பாரம்பரியம், பொருளாதார வளர்ச்சி மற்றும் ராணுவ வலிமை ஆகியவற்றை பறைசாற்றும்.
பள்ளிக் குழந்தைகள் நாட்டுபுறக் கலைகள் மற்றும் கைவினைகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவார்கள். ஒடிசாவின் பஜசல் நடனம், ஃபிட் இந்தியா இயக்கம் மற்றும் தற்சார்பு இந்தியா ஆகியவை காட்சிப்படுத்தப்படும். சுமார் 400 குழந்தைகள் குடியரசு தின விழாவில் பங்கேற்கிறார்கள். தில்லி தமிழ் சங்க பள்ளிகளின் சார்பில் வண்ணமிகு கலாச்சார நிகழ்ச்சி நடைபெறும்.
வங்க தேச முப்படைகளில் இருந்து 122 வீரர்கள் அணிவகுப்பில் கலந்து கொள்வார்கள். நாட்டுக்காக தங்கள் இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு தேசிய போர் நினைவு சின்னத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்துவதில் இருந்து குடியரசு தின நிகழ்ச்சிகள் தொடங்கும். பின்னர் ராஜபாதையில் உள்ள மேடைக்கு வரும் பிரதமரும், இதர பிரமுகர்களும் அணிவகுப்பை பார்வையிடுவார்கள்.
பாரம்பரிய முறைப்படி தேசிய கொடி ஏற்றப்பட்டு, 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்படும். பின்னர் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொள்வார். முப்படைகளின் வலிமைகள் மற்றும் சாகசங்கள் இந்நிகழ்வின் போது பறைசாற்றப்படும். ரஃபேல், ஜாகுவர், மிக்-29 ஆகியவை அணிவகுப்பில் இடம் பெறும்.
தேசிய கீதம் இசைக்கப்பட்டு, மூவண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டு குடியரசு தின நிகழ்ச்சி இனிதே நிறைவுறும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே
காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1692251
**********************
(Release ID: 1692335)