குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

சந்தைப் படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளையும் ஏற்றுமதிக்கான சாத்தியக்கூறுகளையும் ஆராயுமாறு மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி வலியுறுத்தல்

Posted On: 25 JAN 2021 5:14PM by PIB Chennai

பொருட்களை சந்தைப் படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளையும் ஏற்றுமதிக்கான சாத்தியக்கூறுகளையும் ஆராய்வதன் வாயிலாக 30 சதவிகிதமாக தற்போதுள்ள  குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு அடுத்த 5 ஆண்டுகளில் 40 சதவீதமாக உயரக்கூடும் என்று மத்திய குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் திரு நிதின் கட்கரி கூறியுள்ளார். ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் கோடி மதிப்பிலான வர்த்தகத்தை மேற்கொள்ளும் திறனுள்ள கிராம தொழில்துறைக்கு அதிகாரமளிப்பதின் மூலம் அவற்றால் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

புதுதில்லியில் பிரபலமான கனாட் சதுக்கத்திலுள்ள காதி விற்பனை நிலையத்தில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பெண் கலைஞர்கள் தயாரித்த ஏராளமான கைவினைப் பொருட்களின் விற்பனையை அமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1692212

**********************


(Release ID: 1692273) Visitor Counter : 193