சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நோய் ஆராய்ச்சி மையத்தின் நிறுவன தினம்: டாக்டர் ஹர்ஷ் வர்தன் தலைமை தாங்கினார்
Posted On:
25 JAN 2021 2:58PM by PIB Chennai
பெங்களூரில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நோய் ஆராய்ச்சி மையத்தின் (ஐசிஎம்ஆர்-என்சிடிஐஆர்), நிறுவன தினத்துக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி காட்சி மூலம் தலைமை தாங்கி, அதன் தசாப்தத்தையும் தொடங்கி வைத்தார்.
மேலும், அபாய காரணிகள் மற்றும் தொற்று அற்ற நோய்களுக்கான சுகாதார தயார்நிலை ஆகியவை குறித்த ஒருங்கிணைந்த தேசிய கணக்கெடுப்பு (என்என்எம்எஸ்) முடிவுகள், புற்றுநோய், நீரிழிவு நோய், இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றுக்கான தொலை தூர மருத்துவ ஆலோசனைக்கான கட்டமைப்பு ஆகியவற்றை மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் வெளியிட்டார்.
கொவிட் தொற்று கட்டுப்பாட்டில், அளவிடமுடியாத பங்களிப்பை அளித்த ஐசிஎம்ஆர் விஞ்ஞானிகளுக்கு ஒட்டு மொத்த மக்கள் சார்பில் டாக்டர் ஹர்ஷ்வர்தன் நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பேசியதாவது:
தொற்று நோய்க்கு மருந்து கண்டறியும் உலகளாவிய நிறுவனங்களில் ஐசிஎம்ஆர்-ம் ஒன்று. இந்தியா தற்போது தடுப்பூசிகளை உருவாக்கி பல நாடுகளுக்கு விநியோகிக்கிறது. இந்த சாதனைக்கான பெருமை நமது விஞ்ஞானிகளையே சாரும். தொற்று அல்லாத நோய்களின் தேசியளவிலான கணக்கெடுப்பு வெளியீடு மகிழ்ச்சி அளிக்கிறது.
தேசிய புற்றுநோய் பதிவு திட்டம், நாட்டுக்கு மிகச் சிறந்த புற்றுநோய் கண்காணிப்புக்கான உபகரணம். புற்றுநோய்க்கான நடவடிக்கைகளை எதிர்கொள்ள இது உதவும். ஆயுஷ்மான் பாரத் மையங்கள் மூலம், வழக்கத்துக்கு மாறான புற்றுநோய்களை பரிசோதிக்கவும் இது உதவும். அனைத்து விதமான புற்றுநோய்களையும் தெரிவிப்பது கட்டாயம் என்ற சட்ட நடவடிக்கை மேற்கொள்வது பற்றி சுாகாதார ஆராய்ச்சிக்கான செயலாளர் ஆய்வு செய்ய வேண்டும்.
கடந்த 12 மாதத்தில் ஆண்களில் நான்கில் ஒரு பங்குங்கு மேல் புகையிலை பொருட்களை பயன்படுத்துவது மற்றும் மது அருந்துவது இந்த என்என்எம்எஸ் கணக்கெடுப்பு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. ஒருவரின் தினசரி உப்பு பயன்பாடு 8 கிராமாக உள்ளது. பெரியவர்களில் 5ல் இரண்டுக்கு மேற்பட்டோரும், வளர் இளம் பருவத்தினரில் நான்கில் ஒருவரும் குறைந்த அளவில் உடற்பயிற்சி செய்கின்றனர். பெரியவர்களில் நான்கில் ஒருவருக்கு மேல், வளர் இளம் பருவத்தினரில் 6.2 சதவீதம் பேரும் கூடுதல் எடையுடன் உள்ளனர். பெரியவர்களில் 10ல் 3 பேருக்கும், வளர் இளம் பருவத்தினரில் 9.3 சதவீதம் பேருக்கும் ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது. பெரியவர்களில் 5ல் இரண்டு பேருக்கு தொற்று அல்லாத நோய் ஏற்படும் காரணங்கள் அதிகம் உள்ளன.
இவ்வாறு டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1692148
**********************
(Release ID: 1692252)
Visitor Counter : 258