குடியரசுத் தலைவர் செயலகம்

72-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடம் குடியரசுத் தலைவர் நாளை உரையாற்றுகிறார்

Posted On: 24 JAN 2021 6:45PM by PIB Chennai

நாட்டின் 72-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடம் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் நாளை (ஜனவரி 25, 2021) உரையாற்றுவார்.

குடியரசுத் தலைவரின் உரை மாலை 7 மணி முதல் அகில இந்திய வானொலியின் அனைத்து தேசிய அலைவரிசைகளில் ஒலிபரப்பப்படுவதுடன், அனைத்து தூர்தர்ஷன் சேனல்களில் இந்தியிலும் அதைத்தொடர்ந்து ஆங்கிலத்திலும் ஒளிபரப்பப்படும்.‌ தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்படும் இந்தி மற்றும் ஆங்கில உரையைத் தொடர்ந்து தூர்தர்ஷனின் பிராந்திய சேனல்களில் மாநில மொழிகளிலும் குடியரசுத் தலைவரின் உரை ஒளிபரப்பாகும். அகில இந்திய வானொலியில் இரவு 9:30 மணி முதல் சம்பந்தப்பட்ட மண்டல அலைவரிசைகளில் குறிப்பிட்ட மாநில மொழிகளில் ஒலிபரப்பாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691916

**********************


(Release ID: 1691977)