பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாப்பட்டது

Posted On: 24 JAN 2021 5:17PM by PIB Chennai

தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று கொண்டாடப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் முயற்சியால், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24ம் தேதி இந்த தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டில் உள்ள பெண்களுக்கு அனைத்து உதவிகள் மற்றும் வாய்ப்புகள் வழங்குவதே இந்த கொண்டாட்டத்தின் நோக்கம்.  இது பெண்களின் உரிமை, கல்வி, ஆரோக்கியம், ஊட்டச்சத்து ஆகியவை குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது.

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தேசத்தின் திருமகள்களுக்கு பிரதமர் இன்று வணக்கம் செலுத்தினார். இது குறித்து சுட்டுரையில் அவர் விடுத்துள்ள செய்தியில், ‘‘தேசிய பெண் குழந்தைகள் தினத்தன்றுபல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்து வரும் நம் நாட்டு திருமகள்களுக்கு வணக்கம் செலுத்துகிறோம்.

பெண் குழந்தைகளுக்கு அதிகாரம், போதியக் கல்வி, நல்ல சுகாதாரம், பாலின பாகுபாடற்ற அக்கறை ஆகியவற்றை வழங்க மத்திய‌ அரசு பல்வேறு நடவடிக்கைகளை   மேற்கொண்டு வருகிறது’’ என குறிப்பிட்டுள்ளார்.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இரானி சுட்டுரையில் விடுத்துள்ள செய்தியில், ‘‘தேசிய பெண் குழந்தைகள் தினத்தில், பெண் குழந்தைகளுக்கு சம அளவிலான உரிமை மற்றும் வாய்ப்புகள் அளிப்பதை உறுதி செய்வதில் எங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். நமது பெண் குழந்தைகளை எண்ணி பெருமைப்படுவோம். தேஸ்கிபேட்டிஹேஸ்டாக்கை பயன்படுத்தி, பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்’’.

பெண் குழந்தைகளின் மேம்பாட்டுக்காக தேசிய கல்வி கொள்கை -2020-ல் தனி நிதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பள்ளி செல்லும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் தேசிய கல்வி கொள்கை கவனம் செலுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691891

**********************



(Release ID: 1691974) Visitor Counter : 813