தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
நாம் வளரும் போது, நமது பல செயல்பாடுகள் உணரப்படுவதில்லை: இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘கேட் டாக்’ திரைப்பட இயக்குனர் பேட்டி
கோவாவில் நடைபெறும் 51வது, இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், ‘கேட் டாக்’ குறும்படம் திரையிடப்பட்டது.
இது குறித்து அதன் இயக்குனர் அஷ்மிதா குகா நியோகி கூறியதாவது:
நாம் வளரும் போது, நமது பல செயல்பாடுகள் உணரப்படுவதில்லை. ஒரு குழந்தை ஏதாவது ஒரு செயலில் ஈடுபடலாம். அதை அந்த குழந்தையால் அநேகமாக புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம். ஆனால், சில ஆண்டுகளுக்குப்பின் அந்த செயலின் அர்த்தத்தை அந்த குழந்தை புரிந்தும் கொள்ளலாம்.
வளர் இளம் பருவத்தில், நாம் அறியும் மற்றும் அறியாத இரு உலகம் உள்ளது. அறிந்ததும், அறியாததும் ஒன்றாக கலக்கும் காலமும் நமது வாழ்வில் உள்ளது.
எங்கள் படம், ஒரு சகோதர உறவு மூலம் இதை ஆராய்கிறது.
இவ்வாறு அஷ்மிதா குகா நியோகி கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691814
**********************
(रिलीज़ आईडी: 1691868)
आगंतुक पटल : 264