இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
பயிற்சி மையங்களுக்கு திரும்பும் விளையாட்டு வீரர்களின் பயிற்சியில் தொய்வில்லாமல் இருப்பதற்கான நடவடிக்கையை இந்திய விளையாட்டு ஆணையம் மேற்கொண்டுள்ளது
Posted On:
23 JAN 2021 7:23PM by PIB Chennai
பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட பின்னர் தனது மையங்களுக்கு திரும்பும் ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களின் பயிற்சியில் தொய்வில்லாமல் இருப்பதற்கான நடவடிக்கையை இந்திய விளையாட்டு ஆணையம் எடுத்துள்ளது. தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை இதன் பொருட்டு ஆணையம் மாற்றியுள்ளது.
2020 செப்டம்பர் 11 மற்றும் டிசம்பர் 3 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு செயல்முறைகளை சற்றே திருத்தி உள்ள இந்திய விளையாட்டு ஆணையம், தேசிய முகாம்கள் மற்றும் இதர பயிற்சி மையங்களுக்கு திரும்பும் விளையாட்டு வீரர்கள் பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லாமல் பயிற்சியை தொடரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இந்திய விளையாட்டு ஆணையம், தங்களது பயிற்சி திட்டத்தை விளையாட்டு வீரர்கள் தொய்வில்லாமல் மேற்கொள்வதற்காக இந்த நடவடிக்கைை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
பயோ பபுள் எனப்படும் உயிரி குமிழிக்குள் இருக்கும் வீரர்களிடம் இருந்து முதல் 7 நாட்களுக்கு அல்லது ஆர்டி பிசிஆர் பரிசோதனையில் தொற்று இல்லை என்று வரும் வரை தள்ளி இருப்பதைத் தவிர, தங்களது பயிற்சிகளை விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து மேற்கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691658
**********************
(Release ID: 1691708)
Visitor Counter : 142