தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் அலங்கார ஊர்தி தொழிலாளர்களின் நலம் மற்றும் பாதுகாப்பை கொண்டாடுகிறது.

Posted On: 23 JAN 2021 6:36PM by PIB Chennai

அமைப்புசார்ந்த மற்றும் அமைப்புசாராத தொழிலாளர்களின் வாழ்வில் தொழிலாளர் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்போகும் மாற்றங்களை ஷிராம் ரத்என்னும் தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் குடியரசு தின அலங்கார ஊர்தி காட்சிப்படுத்துகிறது.

தொழிலாளர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வில் இருந்து அதிகரிக்கப்பட்ட சமூக பாதுகாப்பு வரை, தொழிலாளர் சீர்திருத்தங்களின் முக்கிய அம்சங்களை ஷிராம் ரத்வெளிப்படுத்துகிறது.

கடின உழைப்புக்கு மதிப்பு, அனைவருக்கும் சம உரிமைஎன்ற மையக்கருத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அலங்கார ஊர்தி, தொழிலாளர் சட்டங்கள் தொழிலாளர்களுக்கு எவ்வாறு அதிகாரம் அளிக்கும் என்றும், இது வரை இல்லாத வகையில் அவர்களின் வாழ்வை எவ்வாறு பாதுகாப்பானதாக மாற்றும் என்பதையும் எடுத்துரைக்கிறது.

தொழிலாளர்களின் வாழ்வில் தொழிலாளர் சட்டங்கள் ஏற்படுத்தவுள்ள நேர்மறை மாற்றங்களை அலங்கார ஊர்தியின் ஒவ்வொரு பகுதியும் சிறப்பான முறையில் எடுத்துரைக்கிறது. இந்த ஊர்தி அணிவகுப்பில் சேர்க்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் திரு சந்தோஷ் குமார் கங்க்வார் கூறினார்.

தொழிலாளர்கள் நலனை பேணி காக்கும் அதே வேளையில், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் விதமாக முதலீடுகளையும் ஈர்க்கும் வகையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே

காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691635

************************



(Release ID: 1691685) Visitor Counter : 141


Read this release in: Punjabi , English , Urdu , Hindi