தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

எவ்வாறு கையாள்வது என்று சமுதாயத்திற்கு தெரியாத மனநல சிக்கல்கள் குறித்து ‘ஓட்டோ தி பார்பாரியன்’ எடுத்துரைக்கிறது

Posted On: 23 JAN 2021 6:51PM by PIB Chennai

எவ்வாறு கையாள்வது என்று சமுதாயத்திற்கு தெரியாத மனநல சிக்கல்கள் குறித்து ஓட்டோ தி பார்பாரியன்எடுத்துரைக்கிறது. மன நோய்கள் எளிதில் அடையாளப்படுத்த முடியாததாக இருக்கின்றன. எளிதில் கண்டுபிடிக்க முடியாத மன அழுத்தம் குறித்த விழிப்புணர்வை இந்த திரைப்படம் உருவாக்குகிறது,” என்று இயக்குநர் ருக்சாண்ட்ரா கிடெஸ்கு கூறினார்.

தனக்கு நெருக்கமான ஒருவரின் தற்கொலையை ஒருவர் எவ்வாறு கையாள்கிறார் என்பதை இத்திரைப்படம் கூறுகிறது என்று கோவாவில் நடைபெற்று வரும் 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றில் இன்று பேசிய இயக்குநர் கூறினார்.

ரோமானிய திரைப்படமான ஓட்டோ தி பார்பாரியன்’-இன் இந்திய சிறப்பு காட்சி 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நேற்று திரையிடப்பட்டது.

நமது தினசரி வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் பல்வேறு முகமூடிகளை நோக்கி இந்த திரைப்படம் கேள்விகளை எழுப்புகிறது,” என்று கிடெஸ்கு மேலும் கூறினார்.

சரஜேவோ திரைப்பட விழா, சின்ஈஸ்ட் திரைப்பட விழா மற்றும் கிழக்கு ஐரோப்பா திரைப்பட விழா ஆகியவற்றுக்கும் ஓட்டோ தி பார்பாரியன்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே

காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691646

**********************(Release ID: 1691677) Visitor Counter : 143