சுற்றுலா அமைச்சகம்

“21-ஆம் நூற்றாண்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் முக்கியத்துவம்” என்னும் தலைப்பில் இணைய கருத்தரங்கை சுற்றுலா அமைச்சகம் நடத்தியது

Posted On: 23 JAN 2021 3:47PM by PIB Chennai

“21-ஆம் நூற்றாண்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் முக்கியத்துவம்என்னும் தலைப்பில் நமது தேசத்தை பாருங்கள் வரிசையின் கீழ் 73-வது இணைய கருத்தரங்கை 2021 ஜனவரி 22 அன்று மத்திய சுற்றுலா அமைச்சகம் நடத்தியது

நேதாஜி குறித்த திறந்தவெளி தளத்தின் ஒருங்கிணைப்பாளரும், செய்தி தொடர்பாளருமான திரு சந்திர குமார் போஸ் இந்த இணைய கருத்தரங்கை வழங்கினார். இந்திய சமூக ஜனநாயக பேரவையோடு இணைந்துள்ள அவர், சமூக பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

கொல்கத்தா மற்றும் லண்டனில் செயல்பட்டு வரும் ஆய்வு நிறுவனமான நேதாஜி சுபாஷ் ஃபவுண்டேசன் என்னும் அமைப்புடனும் அவர் இணைந்து பணியாற்றுகிறார். ஆசாத் ஹிந்த் ஃபௌஜ் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்த ஆராய்ச்சியில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

 

ஜனவரி 22 அன்று நடைபெற்ற இணைய கருத்தரங்கில், இந்திய சுதந்திர போரட்டத்திற்கு நேதாஜி ஆற்றிய பங்கு குறித்தும், அவரது லட்சியங்கள், தத்துவங்கள் மற்றும் ஒன்றுபட்ட & வளமான இந்தியாவுக்கான அவரது கனவு குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

இணைய கருத்தரங்கின் காணொலியை https://www.youtube.com/channel/UCbzIbBmMvtvH7d6Zo_ZEHDA/featured என்னும் முகவரியிலும், இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் அனைத்து சமூக ஊடக தளங்களிலும் காணலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே

காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691566

**********************

 



(Release ID: 1691615) Visitor Counter : 176