தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

நீங்கள் நேசிக்கும் ஒரு நபரை விட்டு அவரது நன்மைக்காக விலகுவது என்பது என்னை எப்போதுமே ஆச்சரியப்படுத்தி இருக்கிறது: ராதா இயக்குநர் பிமல் பொடார்

நீங்கள் நேசிக்கும் ஒரு நபரை விட்டு அவரது நன்மைக்காக விலகுவது என்பது என்னை எப்போதுமே ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அப்படித் தான் இந்த கதை உருவானது,” என்று தனது வங்க மொழி அனிமேஷன் கார்ட்டூன் திரைப்படமான ராதா குறித்து இயக்குநர் பிமல் பொடார் பேசினார்.

நமக்காக நமது வீடுகளில் காத்திருக்கும், தொடர்ந்து காத்திருக்கப் போகும் நபர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக ராதா உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

கோவாவில் நடைபெற்று வரும் 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றில் இன்று பேசிய இயக்குநர் பிமல் பொடார் இவ்வாறு கூறினார்.

இயக்குநராக அவரது முதல் திரைப்படமான ராதா: தி எட்டர்னல் மெலோடி’, 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இந்திய பனோரமாவில் திரைப்படமில்லா பிரிவில் இடம் பெற்றது.

இந்த படத்தை தேர்ந்தெடுத்ததற்காக இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கு நன்றி தெரிவித்த அவர், “இங்கு இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. நமது படைப்பை பார்வையாளர்கள் ரசிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வது உற்சாகத்தை அளிக்கிறது. நெருக்கடியான நேரத்தில் இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை நடத்தும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் ஏற்பாட்டாளர்களுக்கு பாராட்டுகள்,” என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே

காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691269

***********************


(Release ID: 1691394)