தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்த தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, அவரைப்பற்றிய ஆவணப் படங்களை வெளியிடுகிறது திரைப்பட பிரிவு

Posted On: 22 JAN 2021 1:00PM by PIB Chennai

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்த தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, அவரைப்பற்றிய ஆவணப் படங்களை திரைப்பட பிரிவு வெளியிடுகிறது. 

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின்  வெல்ல முடியாத உணர்வு, மற்றும் நாட்டுக்கு ஆற்றிய தன்னலமற்ற சேவை ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் அவரது பிறந்த நாளான ஜனவரி 23ம் தேதியை பராக்கிரம(தைரியம்) தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.  இதை முன்னிட்டு திரைப்பட பிரிவு நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை மற்றும் இந்திய சுதந்திரத்துக்காக  அவரது தளராத போராட்டம் பற்றிய 2 ஆவணப்படங்களை வெளியிடுகிறது.

தி பிளேம் பர்ன்ஸ் பிரைட்’(பிரகாசமாக எரியும் சுடர்)  (43 நிமிடங்கள் /ஆங்கிலம்/1973/ஆசிஸ் முகர்ஜி) மற்றும் நேதாஜி  (21 நிமிடங்கள்/இந்தி /1973/அருண் சவுத்திரி) ஆகிய இரண்டு ஆவணப்படங்களும் திரைப்பட பிரிவின் இணையதளம் மற்றும் யூ ட்யூப் சேனலில் ஜனவரி 23ம் தேதி நாள் முழுவதும் ஒளிபரப்பபடுகிறது.

இந்த ஆவண படங்களை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கலாம்.

 https://filmsdivision.org/ https://www.youtube.com/user/FilmsDivision

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691172

*******************

 (Release ID: 1691362) Visitor Counter : 19