தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

அனைத்து தயாரிப்பாளர்களும் ஓடிடி தளங்களுக்கு நல்ல லாபத்திற்கு தங்களது படைப்புகளை விற்றுள்ளார்கள்: அஜித் அந்தாரே, சிஓஓ, வயாகாம் 18 ஸ்டூடியோஸ்

அனைத்து தயாரிப்பாளர்களும் ஓடிடி தளங்களுக்கு நல்ல லாபத்திற்கு தங்களது படைப்புகளை விற்றுள்ளார்கள். ஓடிடியின் வருகையால் ஒரு திரை கொண்ட அரங்குகள் தங்களது முக்கியத்துவத்தை இழந்துள்ளன என்று  வயாகாம் 18 ஸ்டூடியோசின் தலைமை செயல்பாட்டு அதிகாரி அஜித் அந்தாரே கூறினார்.

இதை ஆமோதித்த, ஜீ ஸ்டூடியோசின் தலைமை வணிக அலுவலர் ஷாரிக் பட்டேல், இந்த தளத்தின் வருகையைத் தொடர்ந்து, ஓடிடிக்களுக்கு படைப்புகளை நல்ல லாபத்திற்கு விற்று வரும் போக்கு அதிகரித்து வந்ததாகவும், கொவிட்-19 பொதுமுடக்கத்தின் போது இது இன்னும் அதிகரித்ததாகவும் கூறினார்.

ஒரு திரை கொண்ட அரங்குகளை காப்பாற்றுவது தற்போதைய தேவை என்று இந்திய வர்த்தக கூட்டமைப்பைன் (சிஐஐ) இணை தலைவரும், யூஎஃப்ஓ மூவிசின் கூட்டுத் தலைவருமான கபில் அகர்வால் கூறினார்.

 

இதை ஆமோதித்த திரைப்பட விநியோகஸ்தரும், திரையரங்கு உரிமையாளருமான அக்‌ஷய் ரதி, “ஒரு திரை கொண்ட அரங்குகளுக்கு புத்தாக்கம் அளிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. திரையரங்கு உரிமையாளர்களுக்கு தற்போது வருமானமே இல்லை,” என்றார்.

கோவாவில் நடைபெற்று வரும் 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடந்த இந்தியாவில் சினிமாவின் எதிர்காலம்: வாய்ப்புகள் & சவால்கள்என்னும் காணொலி கலந்துரையாடலில் மேற்கண்ட கருத்துகள் வெளிப்பட்டன.

திரைப்பட தயாரிப்பாளரும், ராய் கபூர் ஃபிலிம்ஸ் நிர்வாக இயக்குநரும், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கிற்கான சிஐஐ தேசிய குழுவின் இணை தலவருமான சித்தார்த் ராய் கபூர் இந்த அமர்வை நெறியாள்கை செய்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691196

**********************


(Release ID: 1691345) Visitor Counter : 199