ரெயில்வே அமைச்சகம்

வந்தே பாரத் வகை ரயில் பெட்டிகளுக்கான ஒப்பந்தத்தை இந்திய ரயில்வே இறுதி செய்தது

Posted On: 22 JAN 2021 2:33PM by PIB Chennai

ரயில் பெட்டிகளுக்கான (வந்தே பாரத் வகை) ஐஜிபிடி சார்ந்த மும்முனை உந்துவிசை, கட்டுப்பாடு மற்றும் இதர தளவாடங்களின் வடிவமைப்பு, மேம்பாடு, தயாரிப்பு, விநியோகம், ஒருங்கிணைப்பு, பரிசோதனை மற்றும் பொருத்துதலுக்கான ஒப்பந்தத்தை இந்திய ரயில்வே இறுதி செய்துள்ளது.

ஒவ்வொன்றிலும் 16 பெட்டிகளைக் கொண்ட 44 அடுக்குகளுக்கான ஒப்பந்தம் 2021 ஜனவரி 21 அன்று இறுதி செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி, விரிவான வருடாந்திர பராமரிப்பை ஐந்து வருடங்களுக்கு ஒப்பந்ததாரர் மேற்கொள்ள வேண்டும்.

உள்நாட்டிலேயே ரயில் பெட்டிகளை தயாரிப்பதற்காக தொழில்துறையுடன் பல கட்டங்களாக நடத்தப்பட்ட ஆலோசனைகளுக்கு பிறகு இந்த ஒப்பந்தத்திற்கான வரைமுறைகள் நிர்ணயிக்கப்பட்டன. முதல் முறையாக, ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பில் 75 சதவீதம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும். இதன் மூலம் தற்சார்பு இந்தியா இயக்கத்திற்கு ஊக்கம் கிடைக்கும்.

 

மூன்று நிறுவனங்கள் பங்கேற்ற இந்த ஏலத்தில், மொத்த மதிப்பில் 75 சதவீதம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்ற விதியை பூர்த்தி செய்த, குறைவான ஏலத்தொகையை கேட்ட திருவாளர்கள் மேதா செர்வோ டிரைவ்ஸ் லிமிடெட்டுக்கு ரூ 2211,64,59,644-க்கு ஒவ்வொன்றிலும் 16 பெட்டிகளைக் கொண்ட 44 அடுக்குகளுக்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691194

**********************



(Release ID: 1691338) Visitor Counter : 156