தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

85 வயதிலும் தெருக்கூத்தை நடத்தும் சாந்தாபாய், தோம்பாரி சமூகத்தின் புகழை நிலைநிறுத்த உதவுகிறார்: இயக்குநர் பிரதிக் குப்தா

“85 வயதிலும் தெருக்கூத்தில் பங்குபெற்று தோம்பாரி சமூகத்தின் புகழை நிலைநிறுத்த உதவும் சாந்தாபாய் பவாரின் பயணத்தை எங்களது திரைப்படமான சாந்தாபாய் விவரிக்கிறது. அழிந்து வரும் கலை வடிவம் குறித்த ஆவணப்படமான இதில் நடித்துள்ள சாந்தாபாய், தெருக்கூத்து மூலமாகவே தனது வாழ்க்கையை நடத்துகிறார்,” என்று கோவாவில் நடைபெற்று வரும் 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றில் இன்று பேசிய இயக்குநர் பிரதிக் குப்தா கூறினார்.

இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஆவணப்படம், 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இந்திய பனோரமாவில் திரைப்படமில்லா பிரிவில் இடம் பெற்றது.

இந்தியா முழுவதும் வாழும் தோம்பாரி சமூகத்தினர், கயிற்றின் மீது நடப்பது, ஆபத்தான சாகசங்களை செய்வது போன்ற நிகழ்ச்சிகளை தெருக்களில் நடத்துவதில் புகழ் பெற்றவர்கள் ஆவார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691188

**********************


(Release ID: 1691315) Visitor Counter : 181