அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
மாநில அளவிலான ஆராய்ச்சியாளர்களின் இணைப்பை மேம்படுத்த மத்திய - மாநிலங்களின் ஒத்துழைப்பை வலுப்படுத்தவேண்டியது அவசியம் : நிபுணர்கள் கருத்து
Posted On:
22 JAN 2021 11:00AM by PIB Chennai
மாநில அளவிலான ஆராய்ச்சியாளர்களை தேசிய அளவில் இணைக்க, மத்திய - மாநிலங்களின் ஒத்துழைப்பை வலுப்படுத்தவேண்டியது அவசியம் என நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
ஐந்தாவது தேசிய அறிவியல் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க வரைவுக் கொள்கை (எஸ்டிஐபி) ஆலோசனை கூட்டம் ஜனவரி 21ம் தேதி நடந்தது. இதில், வட இந்தியாவைச் சேர்ந்த அரசு, கல்வி நிறுவன மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் நிபுணர்கள் பலர் பங்கேற்றனர். அப்போது மாநில அளவிலான ஆராய்ச்சியாளர்களை தேசிய அளவில் இணைக்க, மத்திய அரசு - மாநிலங்கள் இடையே ஒத்துழைப்பு வலுப்பட வேண்டும் என்றும், தொழில்நுட்பரீதியாக பின்தங்கிய பகுதிகளில் சிறப்பு மையங்களை ஏற்படுத்தி, நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும் என அவர்கள் சுட்டிக் காட்டினர்.
இது குறித்து எஸ்டிஐபி தலைவர் டாக்டர் அகிலேஷ் குப்தா கூறுகையில், ‘‘இந்த ஆலோசனை மூலம் பெறப்பட்ட கருத்துக்கள் மிகவும் நுட்பமானவை. எஸ்டிஐபி வரைவுக் கொள்கையை மாற்றியமைப்பதில் இந்த ஆலோசனைகள் பயன்படுத்தப்படும்” என்றார்.
இந்த எஸ்டிஐபி வரைவு ஆவணம் குறித்த கருத்துக்களை india-stip[at]gov[dot]in என்ற இ-மெயில் மூலம் பொது மக்கள் ஜனவரி 31ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என எஸ்டிஐபி தலைமை செயலகம் மற்றும் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் உள்ள அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கொள்கை ஆராய்ச்சி மையம் ஆகியவை கூறியுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691126
---
(Release ID: 1691226)