அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வு கட்டுரை வெளியீடுகளில் இந்தியாவின் உலகளாவிய நிலை உயர்வு

Posted On: 22 JAN 2021 10:59AM by PIB Chennai

ஆய்வு கட்டுரைகள் வெளியிடுவதில், இந்தியா ஏற்கனவே 3வது இடத்தில் உள்ள நிலையில், தற்போது உலகளாவிய புத்தாக்க பட்டியலில், முதல் 50 புத்தாக்க பொருளாதார நாடுகளில் இந்தியாவும் உள்ளது. பல வளர்ந்த, வளரும் நாடுகளைவிட முன்னால் உள்ளது.

இந்த சாதனை குறித்து அறிவியல் தொழில்நுட்ப துறைச் செயலாளர் பேராசிரியர் அசுதோஸ் சர்மா கூறுகையில், ‘‘கண்டுபிடிப்பு சூழல், புதுமை சூழல் ஆகியவற்றை  இணைப்பதற்கான எங்கள் முயற்சிகள் இந்த மாற்றத்தைக் கொண்டுவர உதவியுள்ளன. 5வது தேசிய அறிவியல் மற்றும் புதுமை கொள்கை, இதை மேலும் முன்னோக்கி கொண்டு செல்ல உதவும் ’’ என்றார்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இந்தியாவின் தேசிய முதலீடு ரூ.2017-18ம் ஆண்டில் ரூ. 1,13,825.03 கோடியிலிருந்து, 2018-19ம் ஆண்டில் ரூ.1,23,847.71 கோடியாக அதிகரித்துள்ளதுஅதே நேரத்தில், அறிவியல் தொழில்நுட்பத் துறையின் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான கருத்துகளைத் தெரிவிக்கும்நிதிதிட்டத்தின் செயல்பாடுகள், இந்த நிலையை அடைய முக்கிய பங்காற்றியுள்ளனநிதி அமலாக்கத்தால், அறிவியல் தொழில் நுட்பத் துறையின் 150 தொழில் வளர்ப்பு மையங்கள் மூலம்  3,681 தொடக்க நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 1992 அறிவுசார் சொத்துரிமைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கடந்த 5 ஆண்டுகளில், 65,864 நேரடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ரூ.27,262 கோடிக்கு பொளாதார வளர்ச்சியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691125

 

------


(Release ID: 1691214) Visitor Counter : 411