நிலக்கரி அமைச்சகம்

இந்திய நிலக்கரி நிறுவனத்தின் என்சிஎல், சிசிஎல் மற்றும் டபிள்யூசிஎல் நிறுவனங்களுக்கு விருது: மத்திய அமைச்சர் வழங்கினார்

Posted On: 21 JAN 2021 3:37PM by PIB Chennai

இந்திய நிலக்கரி நிறுவனத்தின் என்சிஎல், சிசிஎல் மற்றும் டபிள்யூசிஎல் நிறுவனங்களுக்கு நிலக்கரி அமைச்சரின் விருதை, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர்  திரு பிரகலத் ஜோஷி வழங்கினார்.

நிலக்கரி சுரங்கத்தில் சிறந்த நடைமுறைகளை ஊக்குவிப்பதற்காக நிலக்கரி அமைச்சரின் விருது உருவாக்கப்பட்டது. 2020ம் ஆண்டுக்கான விருதுகளை, இந்திய நிலக்கரி நிறுவனத்தின் வடக்கு நிலக்கரி சுரங்க நிறுவனம் (என்சிஎல்), மத்திய நிலக்கரி சுரங்க நிறுவனம் (சிசிஎல்) மற்றும் மேற்கு நிலக்கரி சுரங்க நிறவனம் (டபிள்யூசிஎல்) ஆகியவற்றுக்கு மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் திரு பிரகலத் ஜோஷி வழங்கினார். 

இந்திய நிலக்கரி நிறுவனத்தின் வர்த்தகத்தை மேம்படுத்தும் திட்டத்தையும் அமைச்சர் திரு பிரகலாதா ஜோஷி தொடங்கி வைத்தார்.

நிலக்கரி உற்பத்தியில் சிறந்த செயல்பாட்டுக்காக சிஐஎல் மற்றும் என்சிஎல் நிறுவனங்களுக்கும், சிறந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சிசிஎல் மற்றும் டபிள்யூசிஎல் நிறுவனங்களுக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு பிரகலத் ஜோஷி, ‘‘ நமது எரிசக்தி தேவைகளில் நிலக்கரி முக்கிய ஆதாரமாக உள்ளது. இது தொடர்ந்து இருக்கும். நிலக்கரி உற்பத்தியில் தற்சார்படைய இந்தியா முயற்சிக்கிறது.  இதை ஊக்குவிப்பதற்காக இந்த விருது ஏற்படுத்தப்பட்டது. வெற்றி பெற்ற நிறுவனங்களுக்கு வாழ்த்துக்கள். வரும் காலங்களில், இன்னும் திறமையாக உயர்ந்த தரத்துடன் செயல்பட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1690852

******


(Release ID: 1690934) Visitor Counter : 183