தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

தற்போதுள்ள நெருக்கடி நிலையில் பல குடும்பங்களுக்கு சம்மர் ரிபல்ஸ் தார்மீக ஆதரவு வழங்கும்: திரைப்படத்தின் இயக்குநர் திருமிகு மார்ட்டினா சகோவா நம்பிக்கை

Posted On: 20 JAN 2021 5:02PM by PIB Chennai

பதினொரு வயதுச் சிறுவன் தனது தாயை எதிர்த்து, ஜெர்மனியில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறி, தனது தாத்தாவைத் தேடி ஸ்லோவாக்கியாவிற்குப் பயணமாகிறான். அவன் எண்ணியவாறு அவனது தாத்தா  நட்பு பாராட்டவில்லை என்பது அங்கு சென்றதும்தான் அவனுக்குத் தெரிகிறது. 51 இந்திய சர்வதேச திரைப்பட விழாவின், உலக பனோரமா பிரிவில் இடம் பெற்ற திரைப்படமான சம்மர் ரிபல்ஸ் என்ற அந்தத் திரைப்படத்தின் இயக்குநர் திருமிகு மார்ட்டினா சகோவா அச்சிறுவனின் சாகசங்கள் பற்றி  பேசுகையில், “11 வயது சிறுவனின் பார்வையிலிருந்து இந்தக் கதை கூறப்படுகிறது. தற்போதுள்ள நெருக்கடி தருணங்களில் ஏராளமான குடும்பங்களுக்கு இந்தத் திரைப்படம் தார்மீக ஆதரவளிக்கும் என்று நான் நம்புகிறேன். நட்பு, நம்பிக்கை, நெருக்கம், காதல் உணர்ச்சிகளை இந்தத் திரைப்படம் வெளிப்படுத்துகிறது. நாங்கள் வெளிப்படுத்தியுள்ள உணர்ச்சிகளைப் பார்வையாளர்களும் உணர்வார்கள் என்றும்சிறப்பு நகைச்சுவை அவர்களது உணர்வுகளை மேம்படுத்தும்  என்றும் நம்புகிறேன்”, என்று தெரிவித்தார்.

51-ஆவது இந்திய சர்வதேச திரைப்படத் விழாவின் 5-ஆம் நாளான இன்று (ஜனவரி 20, 2021) ஊடக சந்திப்பில் பேசுகையில் அவர் இதைக் கூறினார். தமது திரைப்படத்திற்கான பெயர்க்காரணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “சிறுவர் கதாபாத்திரங்கள் மாறாநிலையை விரும்பவில்லை, எவ்வாறேனும் அவர்கள் மாற்றத்தை நாடுகிறார்கள்”, என்று குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1690420

**********************



(Release ID: 1690538) Visitor Counter : 152