எரிசக்தி அமைச்சகம்
இமாச்சலப் பிரதேசத்தின் தொலைதூரப் பகுதிகளுக்கும் தொலைத்தொடர்பு வசதி: மின் தொகுப்பு நிறுவனம்-மாநில அரசு ஒப்பந்தம்
Posted On:
20 JAN 2021 3:03PM by PIB Chennai
மலைப் பிரதேசங்களில் தொலைத்தொடர்பு இணைப்பை மேம்படுத்துவதற்காக மத்திய மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய மின் தொகுப்பு நிறுவனம், 500 கிலோமீட்டர் வரையிலான தொலைத்தொடர்பு இணைப்பின் ஒளியியல் நில கம்பியைப் பயன்படுத்துவதற்கு சிம்லாவில் உள்ள இமாச்சலப் பிரதேச மின்சார வாரியத்துடன் (ஹெச்பிஎஸ்இபிஎல்) அண்மையில் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மாநிலத்தில் இணைப்பை அதிகரிப்பதற்காக ஹெச்பிஎஸ்இபிஎல் ஏற்கனவே நிலுவையிலுள்ள கூடுதல் திறன் கொண்ட 350 கிலோ மீட்டர் ஒளியியல் நில கம்பியைவிட இது கூடுதலாகும். மொத்தம் 850 கிலோ மீட்டர் தொலைவில் தொலைத்தொடர்பு இணைப்பினால் மின் தொகுப்பு நிறுவனம் மாநிலத்தின் தொலைதூரப் பகுதிகளையும் சென்றடைய முடியும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1690361
****
(Release ID: 1690480)
Visitor Counter : 184